Tuesday, 16 August 2011

இணையம் எனும் அரசியல் -politics internet

   இன்டர்நெட்  எனும் இணயத்தை பயன்படுத்தும்  ovaruvarum     iஅறிந்த ஒரு சொல் தான் கூகுள். நீங்கள் கொடுக்கும் எந்த தகவலையும் ஓடி ஓடி தேடி தரும் ஒரு தேடு பொறி. இந்த கூகுள் தேடுவது மட்டும் அல்லது. வலைப்பூ, மின் அஞ்சல் காணொளி, செய்திகள், விளம்பர முகவர்  என பல்வேறு சேவைகளையும், தர்ம காரியங்களையும் செய்து வருகிறது. இன் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். `திருமண வீடாக இருந்தாலும் இழவு வீடாக இருந்தாலும் மலையும் மரியாதையும் எனக்க கிடைக்கவேண்டும்` என்பத` இதன் எதிரொலியான யாஹூ மற்றும் மைக்ரோ சொபிட் நிறுவனமான பிங்க் ஆகியவற்றின்  வருவாயை எட்டடி உதைத்து தானே எப்போதும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்பதில் அலாதி பிரியம்.
    ,  ,இன்றைய மனித உலகில் சாராயம், கல், விஸ்கி, ஒயின், kerayin கஞ்சா போன்ற வரிசையில் நிற்கும் போதை வஸ்து இணையம்.இந்த இணையத்தில் நீங்கள்  நுழைய ஒரு நுழைவு வில் வேண்டும். இந்த நுழைவு வாயில் தான் பெரிய . அண்ணன் கூகுள். எப்படி ஈஸ்வரனை பார்த்து நந்தி தரிசனம் முக்கியமோ அப்படி. ஏன் வேறு தேடு  porikala  உலகில் இல்லையா yanra kelviku ungaluku yerpadalam. itharku matraka  pallayirak  kanakkana தேடு  porikal இணையத்தில் irukkathan seikindrana. yeninum கொடுத்த தகவலை சில nodiyil kondu  vanthu தரும்  vallamai இந்தvaram petra  அசுரன் கூகுள் unjdu. yeppai உலகில்  nermaraikum, yethirmaraikum idamundo, இரவு பகல் aan, pen karupu, vellai yenpathu  போல் கூகுள் யாஹூ vum appadiya.
yeninum varam petra  அசுரன் கூகுள்  thava valimaiku edu  koduka யாஹூ vall. itharkidaiyil kana mayil ada pinku  um,. தன polla  sirakai இணையத்தில் asainthadukirathu, ulakam muluthum  ivarkalai தான்  muthanmai தேடு porikalaka  vaithullanar., இந்த உலக  thathakkal தான் ullur  thathakkal uravu vaithu கொள்ள mudiyum. vaithullanar.
  நீங்கள்  yentha  nadakaka இருந்தாலும் sari unkal natil  உள்ள தேடு பொறியில் தேடும்  தகவல் இந்தulaga தாதா   niruvanathudan தான் koodu  vaithullanar. அல்லது vaithirupar.  appothu தான்   தகவல் தேடி tharapadum.
 இந்த  ullur thathakkal nengal ketkum தகவலை   udanadiyaka தேடி தரும் thiraniyatrathu. yan உலக thahtavudan koodu vaithirukum pothu ippadi yenra santhekam  yelalam., தான் pendati pathini, mattavan pondadi parathai yenra  manapanmai, இந்த thathakkal muluth தகவல் theditharuvathil vangakam seikirarka.. ich sulchiyin vetri- idaitharakan ullur thathavai vittu neridaiyaka ulaga thatavai   anuka  ஏன்வேண்டும் என்பத
 இந்த        உலக தாதா அப்படி என்ன அசுரன். நீங்கள் னென்பது போல் பெரிய அசுரன் அல்லன். நீங்கள் தேடும் தகவல் எதுவோ அதனை இந்த தேடு பொறியில்  கொடுத்தல் நீங்கள் கொடுத்த வார்த்தை உள்ள அணைத்து வார்த்தைகள் அடங்கிய தகவலை தரும். அவ்வளவே. நீங்கள் தான் ungaluku   sampathapatta அல்லது தகவலுக்கு    nerukamana  வார்த்தைகளை தேடி எடுத்து கொள்ள . வேண்டுும். சில நேரங்களில்  சம்பந்தமில்லாத தகவலை தேடி தரும் கேலி கூத்தும் உண்டு. இதனை சகித்து கொள்ள கொஞ்சம்  மன வலிமையும் வேண்டும். வாழ்கையை தொலைத்து தேடியது போதாது என்று இது வேற என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, என்ன செய்ய.
 ஒவொரு மதத்திற்கும் ஒரு  thathuvam irupathu போல . inayathirkum உண்டு. தேடு தேடி கொண்ட இரு. எல்லாம்      `   கிடைக்கும். இரவு பகல் பசி, தூக்கம், குடும்பம். வாழ்வு, எல்ல வற்றையும் நாட் கணக்கில் மாதக் கணக்கில்.  வருட கணக்கில் .. இளமையோ முதுமையோ கடந்து போதை தெரியாமல் தேடிகொண்ட எதைக் கொடுத்தாலும் ஏதானும் தேடி தரும் சரியாகவோ,, தவராகொவோ பொத்தனை அமுக்கினாள் பல்பு எரிவது போல இல்லையா? உங்களுக்குள் `அப்படி` ஒரு பல்பு எறிந்தால் ஒழிய 
 .     இனைய நுழைவுக்க இவ்வளவு அரசியல் என்றால் இன்னும் எத்தனை யோ அரசியல் இந்த இணையத்தில் உண்டு. ஊமை கனவு காண்பது போல
 

Sunday, 24 April 2011

POONSAREL VOICE

பூஞ்சாரல் குரல்
        இது எண்ணங்களின் சாரல்  




 
 தேடுகை

எதையும்  தேடியலைந்து 
தொடர்வதில்
இறுக்கமான தேடுகைகள்
மனதில்

எதற்கேனும்  தேடுகையில் 
முன்னேதோ  தேடியவை
கிடைக்க  கூடும்  

ஒருமுறையேனும் 
தேடியது கிடைக்கவோ 
கிடைக்காததை தேடியோ 
தொடர்கிறது

தேவைகளேதும்
புலப்படவில்லைஎனினும்
தேடுகை இன்னும் 
அதிகரித்துக்கொண்டு

ஒரு முடிவுக்கு வராமலே
சில அர்த்தங்களை
மேல் எழுப்பியவாறு 
தேடும் காலம் நகர்கிறது.




ஓவியம் பற்றிய  விவரணை 


முற்றிலும் மாறுபட்டது 
அந்த ஓவியம் 

ஓவியத்தின் பெயரோ 
வரைந்தவரின்  அடிக்குறிப்போ
எதுவும் அதில் பொறிக்கப்படவில்லை 
அடிப்படை நிறங்களைக்  கொண்டே 
அது தீட்டப்பட்டிருந்தது 

அந்த ஓவியம் தீட்டி 
வெகுநாட்கள்  ஆகியிருக்கும் 

மூலைகள் மடங்கி 
ஓவிய நிறம் வெளிரிக்கிந்தது

இயற்கை பற்றியோ கற்பனை பற்றியோ 
அல்லாது 
ஏதோ  பிரதிபலிப்பை  தாங்கியிருந்தது

முதன்முதலாக  அந்த  ஓவியத்தை
கண்டெடுத்தபோது  
அது என்னவென்று  புரிபடவில்லை 

ஓய்வு  நேரங்களில்  
அதை பார்க்க நேரும்போது 
மனசூலுக்கு  தக்க
மாறுபட்டு ஊடுருவியது 

இனிமையோ  இயல்போ 
அதில் தென்படவில்லை 

கலையழகோ  கலாச்சாரமோ 
அதில் பதிவு செய்யப்படவில்லை 

அடிக்கடி  ஓவியத்தை  பார்த்ததில் 
இழையோடியிருந்தது
பயம்  எங்கும் . 




......ஆனாலும்  உன்னை  நேசிக்கிறேன் 

விட்டில் பூச்சிபிடித்து 
செடிகளுக்குள்  கண்பொத்தி 
கரிக்கோட்டி முகம்வரைந்து 
இருட்டுக்குப் பிறகும் 
விளையாடிய  நாட்கள் 

வீடுமாறிய  விதத்தில் 
விட்டுப்போன  நட்பை 
பள்ளிகள் மட்டுமே 
பகிர்ந்து கொண்டது 

ஊர்மாறிப் போனதும் 
உதிர்ந்துபோன நட்பை 
கடிதங்கள் மட்டுமே
கைகுலுக்கி கொண்டது 

காலசூழலில் 
கரைந்துபோன  நட்பை 
ஓய்வு  நேரங்கள் மட்டுமே
உச்சரித்துக் கொண்டது 
தொலைத்துபோன முகங்களில் 
தொடரும் நினைவுகளாய் ....
ஆனாலும்  உன்னை  
நேசிக்கிறேன்.





 ஊஞ்சல்  பதியன் 

ஊஞ்சல்  அசைவதும்
அசைந்து  சப்தமிடுவதும்
எப்போதும் நிகழ்கிறது 

ஒரு அசைவிற்கும்  அதன்
மற்ற  அசைவுக்கும் 
இடையினூடே சிலசமயம்
வித்தியாசங்கள் இருந்திருக்கிறது  

மெதுவாகவும் 
திரும்புகையில்  வேகமாகவும் 
இருப்பதற்கான  அறிகுறிகள் 
தெரிந்தேயிருக்கிறது

அறிகுறிகள் பார்வைக்கும்
சூழலுக்கும் தகுந்தவையாக
கட்டமைதிருக்கிறது

பின்னைய  சூழலுக்கும்
பார்வைக்கும் கட்டமைவுகள்
விவரனையாகிறது

தொலைவும்  தூரமும்  ஊஞ்சல் 
மேலிருந்தே கணக்கிட்டு
நிர்ணயிக்கப்படுகிறது
ங்ஙனமும்  பதியும்  என்பதற்காக(வே)




 அந்த  இடம்  

இன்னும்  பரவி  வழிந்திடவில்லை 
அந்தக்  கூடாரத்தின் அருகாமையில்
எப்போதும் எழுந்திடும்  உளிசப்தம்
முழுமையுறாத  முகங்களும்
துண்டுகளாய் வருப்பட்ட கற்கோடுகளும்
ஆங்காங்கே  இரைந்தொளிரும் கற்களும் 
காணவில்லை  அங்கு 

சிற்றோடையின் ஈரம்சொரிந்த 
மணல்வெளியும்
மக்கிய  கழிகளும்   கீற்றுக்களுக்குமூடே 
முயங்கிய சில  காளான்களைத்  தவிர 
பதிந்திருக்கவில்லை  ஏதும் 

அவ்விடத்தே  கடந்து  செல்லும் சமயங்களில் 
இழந்துபோன உணர்வுகளே
பூரணமாய் கவிந்திருக்கும் 
தொலைவுகளை கடக்க முயலும்
நீயோ நானோ  ஒவ்வாருவரும்
ஏதும் அறிந்திராமலே... 




 போக்குகள் 


காற்று  யோசிப்பதில்லை  சற்றும் 
எதன் வழியாகவும் ஊடுருவி 
வெளிவரும் சக்தி
அதனுள் இருப்பதனால்

அலைந்து  திரிந்து 
உல்லாசமாக  வாழ்கிறது 
எவ்வித  தடைகளுக்கும் 
கட்டுக்களுக்கும் அஞ்சாது 
அதன் போக்கில் 
இயக்கமடைதிருக்கிறது 
கூட்டங்களுக்குள்ளும்  தனியிடதும் 
சுறுசுறுப்புடன்  அவை 

வெளியிடதும் உள்ளும் 
அசைகிறது புழுங்கி 
விதமான சப்தங்களுடன்

இன்று நாளையெனும்  மனிதர்களோடு 
சூழ்ந்தே தவிக்கிறது  என்றும்
தன்னை விடுவித்துக் கொள்ள.    



உள்வெளி 


அச்சுறுத்தல்  வியாபித்திருக்கிறது
எங்கும்
தெருக்கோடி வாகனம்  அழைப்பு மணி
கழிப்பறை இருட்டு  மனித குறட்டை 
பல்லி சப்தம்  எரிவாயு  அடுப்பு 


சாமத்தின்  கதவு தட்டல்கள்  
இப்படி  எல்லாமே 



எதையோ    யூகித்தும்
அல்லாமலும்  அவைகள் 
வலுவுற்றிருக்கிறது  நம்முடன் .




பிராயத்தின்  பயணம் 


நேர்கோட்டிலோ 
ஒன்றுக்கொன்று  இணையாகவோ 
ஒன்றை  மற்றொன்று  வெட்டியோ 
ஒன்றுக்கு மேல் எழுந்தோ 
எங்கோ செல்கின்றன 
சிலவிட்டுச் செல்லல்களுடன் 

சமதளப்பரப்பு ஒன்றின் 
மூலைகளை குறுக்குநெடுக்காக
இனமறியாத கோடுகளுடன் 
இணைப்பவை  நிகழ்ந்தவண்ணம்

தொடு ஆரதோடு
மையவிலகச்   செருகலுடன்
வளைத்து நெளித்து  ஒடித்து 
ஒன்றுடன் ஒன்று  பிணைந்து 
நெய்யப்பட்ட  தொடுகல்
முடிந்தும்  தொடர்ந்தும்
எத்தனையோ  தொடுகல் 
ஒவ்வருவருக்குள்ளும் 
யாரும் எப்போதும்
அறியப்படாமலே .